How to improve communication skills - Tamil
சுலபமாக தொடர்பாற்றல் திறனை வளர்த்துக் கொள்வது எப்படி?
நீங்கள் எந்த துறையில் பணிபுரிய விரும்பினாலும் உங்களிடம் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு திறன்தான் தொடர்பாற்றல் திறன். இதை ஆங்கிலத்தில் கம்யூனிகேஷன் திறன் என்று கூறுவார்கள்.
நாம் கூற நினைக்கும் தகவல்களை சிந்தாமல் சிதறாமல் மற்றவர்களிடம் சேர்ப்பதற்கும், பிறரிடம் இருந்து பெறுவதற்கும் சிறப்பான தொடர்பாற்றல் தேவைப்படுகிறது. ஆகையால் தான் இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறது.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தொடர்பாற்றல் திறனை எவ்வாறு நாம் வளர்த்துக் கொள்வது என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.
தொடர்பாற்றல் திறன் :
👍 பொதுவாக தொடர்பாற்றல் திறனை வளர்த்துக் கொள்வதற்கு நாம் செய்ய வேண்டிய அடிப்படை விஷயம் பிறர் பேசுவதை கவனிப்பதுதான். பிறர் பேசுவதை நீங்கள் கவனிக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு இடையே ஆன உரையாடல் சுவாரஸியமாக மாறிவிடும்.
👍 நீங்கள் யாருடைய பேச்சை கண்டு வியக்கறீர்களோ அவர்கள் பேசும்பொழுது பயன்படுத்தும் மொழி, உடல்மொழி மற்றும் அவர்கள் பேசும் தோனி ஆகியவற்றை கவனியுங்கள்.
👍 தொடர்பாற்றல் திறன் என்பது பாதி பேசுவதும், மீதி பிறர் பேசுவதை கவனிப்பதும் ஆகும். சில சமயங்களில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அமைதியாக இருப்பதே சிறந்த உரையாடல் ஆகும்.
👍 செய்தித்தாள்கள், இதழ்கள், வலைப்பதிவுகள், நாவல்கள், சுயசரிதைகள், விற்பனை பிரசுரங்கள் போன்றவற்றை படிப்பதன் மூலமாக உங்களது தொடர்பாற்றல் திறனை நன்கு வளர்த்துக் கொள்ள முடியும்.
👍 அர்த்தமுள்ள தொடர்பாற்றல் திறன் என்பது பிறரது கண்களை பார்த்துப் பேசுவது ஆகும். உரையாடும் பொழுது பிறரது கண்களை பார்த்து பேசுவது கடினம்தான். பயிற்சியின் மூலம் உங்களது திறனை வளர்த்துக் கொள்ளலாம்.
👍 கேள்விகளை கேட்பதன் மூலம் ஒருவரை புரிந்து கொள்ளுவது மட்டுமில்லாமல், இருவருக்கு இடையே ஆன உரையாடலை ஆர்வம் மிகுந்ததாக மாற்றும். பிற நபர்கள் உணர்வது போல் உங்களால் உணர முடியவில்லை என்றாலும் அவர்களின் எண்ணங்களுக்கும் உணர்ச்சிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறீர்கள் என்பதை நீங்கள் உணர்த்த வேண்டும்.
👍 ஒருவரின் வார்த்தைகளை விட, ஒருவரின் உடல்மொழியே அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தும். ஆகையால் ஒருவரின் முகப்பாவனைகள் மூலம் அவர்களின் நிலை என்ன என்பதை அறிந்துக் கொள்ளலாம்.
👍 நீங்கள் பேசும் பொழுது வாயிக்குள் முனுமுனுக்காமல் சத்தமாகவும் தெளிவாகவும் பேச வேண்டும்.
👍 இவ்வாறு நீங்கள் பயிற்சி செய்தால், பிறரை வியப்பில் ஆழ்த்தும் அளவிற்கு சிறந்த தொடர்பாற்றல் திறனை வளர்த்துக் கொள்ளலாம்.
0 Response to "How to improve communication skills - Tamil"
Post a Comment