Benifits of cycling - Tamil
🚵 சைக்கிள் ஓட்டுவதின் நன்மைகள் 🚵
மனிதனுடைய பரிணாம வளர்ச்சியில் தசைகளின் பங்கு முக்கியமானது. உடலின் எலும்புகளோடு தசைகளும், திசுக்களும் பின்னிப் பிணைந்து உருவத்தையும், தொழிலையும் செய்கிறது. தசைகளுக்குப் போதுமான வேலைகள் இருக்கும் போது உடலில் எந்த பாதிப்பும் உண்டாகாது. குறிப்பிட்ட தசைகள் தொடர்ந்து பயன்படுத்தாமல் இருந்தால் இதனுடன் தொடர்புடைய எலும்புகளும், மூட்டுகளும் பாதிப்படைகின்றன. பல வருடங்களுக்கு முன்பு உடல் ஆரோக்கியத்திற்கு ஒரு காரணமாக சைக்கிளும் இருந்தது.
நம் அனைவராலும் உபயோகப்படுத்தப்பட்ட சைக்கிள், நவீன காலகட்டத்தின் முன்னேற்றத்தினால் சைக்கிளின் உபயோகத்தை நாம் குறைத்து விட்டோம். தற்போது மோட்டார் இருசக்கர வாகனங்களை அதிகமாக பயன்படுத்தி வருகின்றோம். ஆனால் சைக்கிள் ஓட்டுவதன் மூலம் நமக்கு என்னென்ன பயன்கள் உள்ளது என்பதை அறிந்து கொண்டால் இந்த சைக்கிள் பழக்கத்திற்கு நாம் திரும்பவும் சென்றுவிடுவோம். சைக்கிள் ஓட்டுவதினால் என்னென்ன பயன்கள் உண்டு என்பதை பற்றி இப்போது பார்க்கலாம் வாங்க.....
மிதிவண்டி ஓட்டுவதால் இயங்கும் முக்கியமான தசைகள் :
🚴 மிதிவண்டி ஓட்டுவதால் இயங்கும் முக்கியமான தசைகள் என்றால் தொடை மற்றும் முழங்காலில் உள்ள தசைகளாகும். தொடைகள் இரண்டும் சைக்கிள் ஓட்டும்போது அதிகப்படியான வேலை செய்யும்.
🚴 குறிப்பாக தொடர்ந்து மிதிவண்டி ஓட்டுவதால் உடல்கட்டு நன்றாகவும், வலிமையுடனும், ஆரோக்கியத்துடனும் இருக்கும்.
🚴 மிதிவண்டி பயிற்சி கெண்டைக்காலில் உள்ள soleus மற்றும் gastrocnemius தசைகள் நல்ல நிலையில் இருக்க உதவுகிறது.
🚴 கெண்டைக் காலில் உள்ள soleus தசை பெடல் பண்ணும்போது பாதத்தை மிதிக்கவும், gastrocnemius மீண்டும் பெடலை கீழ்புறம் அழுத்தி மிதிக்கவும் பயன்படுகிறது.
🚴 தொடையில் உள்ள hamstring தசையானது முழங்கால் மூட்டை வழித்து மிதிவண்டி பெடலை அழுத்த பயன்படுகிறது. Quadriceps தசைகள் சைக்கிளை வேகமாக அழுத்தி மிதிக்க பயன்படுகிறது.
சைக்கிளிங் நன்மைகள் :
💫 சைக்கிளிங் செய்யும் பொழுது இதயத் துடிப்பு அதிகரிக்கிறது. உடலில் உள்ள கொழுப்பு கரைவதால் உடலின் எடையும் குறைகிறது.
💫 சர்க்கரை நோய்க்கு மருத்துவர்கள் கொடுக்கும் தீர்வு தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள் என்பதுதான். சைக்கிளிங் செய்வதால் உடலில் குளுகோஸ் அளவு குறைகிறது. சர்க்கரை நோயும் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது.
💫 சைக்கிள் ஓட்டுகிறவர்களுக்கு நேர்மறை எண்ணங்கள் அதிகமாக இருக்கும். மிகவும் மகிழ்ச்சியாக காணப்படுவர். ஒரு சிறந்த உடற்பயிற்சிக்கு பின்னர் உடலில் புத்துணர்ச்சி அடையச் செய்யும் ஹார்மோன்கள் சுரக்கிறது.
💫 சைக்கிள் ஓட்டும் போது, நல்ல ஆரோக்கியமான ஆக்ஸிஜனை நாம் சுவாசிக்கிறோம்.
💫 தினமும் சைக்கிள் ஓட்டும் பயிற்சி செய்வதால், இதயத்தில் புது ரத்த நாளங்கள் ஏற்படுகின்றன. இவை, இதயத்தசை நார்களில் அதிகமான ரத்தத்தை எடுத்து செல்கின்றன. இதனால் மாரடைப்பு வராமல் தடுக்கப்படுகிறது.
உச்சி முதல் உள்ளங்கால் வரை வேலை கொடுக்க ஒரு பயிற்சி போதும். இது உடலையும் அழகாக்கும், உள்ளத்தையும் தூய்மையாக்கும்.......!!
0 Response to "Benifits of cycling - Tamil"
Post a Comment