How to become a Leader ( உங்களை தலைவனாக்கும் பண்புகள்!)

 உங்களை தலைவனாக்கும் பண்புகள்!

 அனைவருக்கும் தலைவனாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அது எந்த துறை ஆனாலும் சரி. தலைவன் ஆவதற்கு ஆசை இருந்தால் போதுமா? அதற்கான பண்புகள் இருக்க வேண்டாமா? அவற்றை பற்றிய ஒரு சிறிய தொகுப்பை இன்று காண்போம்.


சிறந்த தலைவன்:


தலைவனாக இருக்க விரும்புபவர்களுக்கு மனிதத் தொடர்பை உருவாக்கும் அறிவுத் திறன் இருக்க வேண்டும். சக மனிதர்களுடன் சுமூகமான நட்புறவு கொள்ளத் தெரிய வேண்டும். 


அறம் சார்ந்து இயங்கத் தெரிய வேண்டும். பரந்த அறிவும், திறந்த மனதும் மற்றும் தன்னைப் போல பிறரை எண்ணும் மனப்பக்குவமும் இருக்க வேண்டும்.


மனித நேயம், உடல் ஆற்றல், தீர்க்கமான சிந்தனை, எதிர்காலத்தைப் பற்றிய சரியான கணிப்பு ஆகியவை தலைமைப் பண்புகளின் சில முக்கிய கூறுகள் ஆகும்.


நல்ல தலைவனாக விளங்குபவன் கருத்துப் பரிமாற்றத்தில் நம்பிக்கை உள்ளவனாக இருப்பான். 


தன்னுடைய கருத்துக்கு எதிரான கருத்துக்களையும், விமர்சனங்களையும் தீவிரமாக பரிசோதித்து, தனது சுய அலசலுக்குப் பிறகு சரியாக இருக்கும் பட்சத்தில் அதனை ஒப்புக் கொள்வான். 


இவ்வாறு மனிதத் தொடர்பின் சங்கிலி அறுபடாமல் மேலும் மேலும் வளர்த்தெடுக்க முயற்சிப்பவனே வெற்றி பெறுகிறான்.


தலைமைப் பண்புகளின் பட்டியல்:


கீழே கொடுக்கப்பட்டுள்ள பண்புகள் பற்றிய கேள்வி பட்டியலை படிக்கும் பொழுது, உங்களிடம் தலைமை பண்புகள் இருக்கிறதா என்பதை நீங்களே அறிந்துக் கொள்ளலாம்.


🌠 அந்தந்த சூழ்நிலைக்கு தக்கபடி மதிநுட்பத்துடன் / விழிப்புணர்வுடன் செயல்படுகிறீர்களா?


🌠 பிறருடைய எதிர்பார்ப்புகளை துல்லியமாகக் கணித்ததுண்டா?


🌠 திடீரென கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தத் தெரிந்தவரா?


🌠 குழுக் கலந்துரையாடலில் பங்கேற்க ஆவல் உண்டா?


🌠 உங்களோடு இருப்பவர்கள் உங்களை நம்பி ரகசியங்களைப் பகிர்ந்ததுண்டா? தகுதியானவர்களை உடன் வைத்துக் கொள்வீர்களா?


🌠 அறிவார்த்தமாகவும் அதே சமயம் சுவாரஸ்யமாக உரையாற்றியதுண்டா? புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளவரா?


🌠 மற்றவர்களுடைய தேவைகளை அறிவீர்களா? அதை நிறைவேற்ற முனைபவர்களா?


🌠 ஒழுக்கத்திற்கு முதலிடம் தருபவரா? கொள்கைப் பிடிப்புடன், அதே சமயம் எந்த சூழலிலும் நடுநிலை தவறாமல் இருப்பவரா?


🌠 மற்றவர்கள் மீது அக்கறை இருக்கிறதா? சமூக அக்கறையில் கவனம் செலுத்தியதுண்டா?


🌠 உயர்ந்த குறிக்கோள்கள் உடையவரா? உங்கள் முடிவுகளை நன்கு யோசித்து தீர்க்கமான முடிவுகளை எடுப்பீர்களா? 


🌠 குழுவாக எடுக்கும் தீர்மானத்தை ஏற்றுக் கொள்வீர்களா?


🌠 சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்கக் கூடியவரா? அதை விரைவாகச் செயல்படுத்த முனைவீர்களா?


🌠 பாகுபாடின்றி அனைவரிடமும் பழகக் கூடியவரா? மற்றவர்களுக்கு முன் மாதிரியாக விளங்கக் கூடிய அதாவது ரோல் மாடலாக விளங்கக் கூடிய தகுதி உள்ளதா?


இந்த கேள்விகளுக்கு உங்களது பதில் ஆம் என்றால் தலைவனாவதற்கான அனைத்து தகுதிகளும் உங்களுக்கு இருக்கின்றன. ஒருவேளை சில கேள்விகளுக்கு இல்லை என்பது உங்கள் பதில் என்றால் அந்த பண்புகளை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

0 Response to "How to become a Leader ( உங்களை தலைவனாக்கும் பண்புகள்!)"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel